வெள்ளி, 8 ஜனவரி, 2010

மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பங்காளியாக மாறிவரும் கிழக்கு முதல்வர்..!!

த.ம.வி.பு கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தனது பிரத்தியேக நிதி ஒதுக்கீட்டில் கிழக்கு மாகாணத்தின் பெருந்தொகையான நிதியினை கல்வி வளர்ச்சிக்கே செலவு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அதனடிப்படையில் தமது இருப்பிடங்களை விட்டு இடம்பெயர்ந்து மீளக்குடியமர்த்தப்பட்டிருக்கின்ற மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டிகளை அண்மைக் காலமாக கிழக்கு முதல்வர் வழங்கி வரகின்றமை குறிப்பிடத்தக்கது.
அதனடிப்படையில் இன்று(07.01.2010) மட். கரடியனாறு மகாவித்தியாலயத்தில் அப்பிரதேசத்தை சார்ந்த தூர இடங்களில் இருந்து பாடசாலைக்கு வருகின்ற மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டிகளை வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட த.ம.வி.பு கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் மாணவர்களுக்கான துவிச்சக்ர வண்டி மற்றும் விளையாட்டு உபகரணங்களை வழங்கி வைத்து உரை நிகழ்த்தினார்,அவர் தனது உரையில் கிழக்கு மாகாணமானது பல்வேறு துறைகளில் பின்னடைவினையே கண்டிருக்கின்றது. ஆனால் இன்று எமக்கு கிடைத்திருக்கின்ற அரிய சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி கல்வியில் அதித அக்கறை கொண்டு அபிவிருத்தி செய்வதன் ஊடாக நாம் ஏனைய துறைகளையும் கட்டி எழுப்ப முடியும்.
குறிப்பாக இப்பிரதேசங்களை அண்டிய பாடசாலை மாணவர்கள் மிகவும் வறுமைக் கோட்டின் கீழ் உள்ளவர்களாகவே இருக்கின்றார்கள். இவர்களது உண்மை நிலையினை அறி;ந்து கொண்டு அதற்கேற்றாற்போல் இங்கு கடமையாற்றுகின்ற ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களும் தமது கடமைகளை செவ்வனே நிறைவேற்ற வேண்டும் அதாவது சமூக நலம் சார்ந்த நோக்கோடு தமது ஆசிரியர் சேவையினை வழங்குமிடத்து அம்மாணவர்களுக்கு அது பயனுள்ளதாக அமையும். இவ்வாறாக கல்வி மற்றும் ஏனைய அபிவிருத்தியினை தொடர்ந்து நாம் நடைபெற வேண்டுமாக இருந்தால் எமது நாட்டில் தற்போதைய தலைவரையே மீண்டும் ஜனாதிபதியாக்க வேண்டிய பொறுப்பு எமது கைகளிலேயே இருக்கின்றது. எனவே நடைபெற உள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஐ.ம.சு.கூட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் மகிந்த ராஜபக்ஷ அவர்களுக்கே எமது வாக்குகளை வழங்கி வெற்றிபெறச் செய்வதனூடாக நாம் இன்றும் எட்டவேண்டி இருக்கின்ற அனைத்து துறைசார்ந்த அபிவிருத்தியனையும் தொடுவதற்கு மிகவும் அனுகூலமாக அமையும். எனவே கிழக்கு மாகாணத்தில் வாழ்கின்ற அனைத்து தமிழ் மக்களும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களுக்கே தங்களது வாக்குகளை வழங்கி அமோக வெற்றிபெறச் செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக