இளைஞர்களுக்கான எதிர்காலம் அமைப்பின் தலைவர் நாமல் ராஜபக்ஷ அண்மையில் லண்டனுக்குச் சென்றிருந்ததுடன் விடுதலைப் புலிகளின் சர்வதேச நிதிப் பொறுப்பாளர் எமில் காந்தன் இரகசியமாக சந்தித்திருப்பதாக எதிரணி வேட்பாளர் சரத் பொன்சேக்காவின் ஊடகப் பேச்சாளர்களான மங்கள சமரவீர மற்றும் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சந்திப்பு எந்தவிதத்தில் நடைபெற்றது என்பது குறித்து உடனடியாக நாட்டிற்குத் தெரியப்படுத்துமாறு அவர்கள் பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்கவை வலியுறுத்தியுள்ளனர்.
சரத் பொன்சேக்காவின் தேர்தல் அலுவலகத்தில் இன்று 15.01.10 முற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர்கள் ,ந்தக் கோரிக்கையை விடுத்துள்ளனர்.
எமில் காந்தன் மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் எடுத்துக்கொண்ட புகைப்படமொன்றையும் அவர்கள் ஊடகவியலாளர்களிடம் வழங்கினர்.
அதேவேளை, இளைஞர்களுக்கான எதிர்காலம் அமைப்பு தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட தொலைக்காட்சி விளம்பரங்களை ஒளிபரப்புவதற்காக எவ்வாறு பணம் கிடைத்தது என்பது குறித்து நாமல் ராஜபக்ஷ வெளியிட வேண்டும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
புகைப்படத்தில் (மொட்டையடித்துள்ளவர்) நாமல் ராஜபக்ஷவிற்கு மிக அருகில் எமில் காந்தன் காணப்படுகிறார்.தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர்களில் ஒருவரான கே பி பத்மநாதன் கைதுசெய்யப்பபட்ட பின்னர், அவரின் பொறுப்புகளை வகிப்பதாக கூறப்படுகிறது
எமிழ்காந்தனுடன் நிற்கும் அளவிற்கு நாமல் ராஜபக்சவிற்கு அவருடனான தொடர்பு என்ன என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினர். இந்தநிலையில், தமிழீழ விடுதலைப்புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பணத்தைக்கொண்டே ஜனாதிபதி தேர்தலுக்காக வீண் விரயங்கள் மேற்கொள்ளப்படுவதாக அநுரகுமார திஸாநாயக்க குற்றம் சுமத்தினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக