ஞாயிறு, 17 ஜனவரி, 2010

கேர்ணல் ராம் ஒருபோதும் கைது செய்யப்படவில்லை -இராணுவப்பேச்சாளர் தெரிவிப்பு..!!

விடுதலைப்புலிகளின் தளபதிகளில் ஒருவரான கேர்ணல், ராம் அரசாங்கத்தினால் விடுக்கப்பட்டுள்ளதாக எதிர்கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத்பொன்சேகாவின் தரப்பு தெரிவித்ததை அரசு தரப்பு மறுத்துள்ளது தடுப்புகாவலில் இருந்து விடுதலைப்புலிகளின் தளபதிகளில் ஒருவரான கேர்ணல் ராம் விடுவிக்கப்பட்டுள்ளதாக சரத் பொன்சேகாவின் தரப்பு அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கேர்ணல் ராம் மறைந்திருக்கும் விடுதலைப்புலிகளுக்கு தலைமை தாங்கும் நிலை ஏற்படலாம் எனத் தெரிவித்துள்ள அந்த அறிக்கையில் இது தேர்தலை மாத்திரமன்றி பொதுமக்களின் வாழ்க்கையையும் சீர்குலைக்கும் என சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இதேவேளை இந்த அறிக்கை தொடர்பில் கருத்துரைத்துள்ள இலங்கை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார கேர்ணல் ராம் என்ற விடுதலைப் புலிகளின் தளபதியை படையினர் ஒருபோதும் கைது செய்திருக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார் கேர்ணல் ராம் கிழக்கில் மறைந்திருக்கலாம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக