சனி, 16 ஜனவரி, 2010
ஜனாதிபதியின் செல்வாக்கு யாழ்ப்பாணத்தில் வேகமாக சரிந்து வருகிறது..?
யாழ் உயர் பாதுகாப்பு வலயத்தில் மக்களை மீள்குடியமர்த்தும் விடயத்தில் இலங்கை அரசு இப்போதும் அனுமதி மறுத்து வருகிறது எனவும் இதன் காரணமாக யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதியின் செல்வாக்கில் சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் சில இணையங்களில் தெரிவிக்கப்படுகிறது. உயர்பாதுகாப்பு வலயத்தில் மக்கள் மீள்குடியமர்வு குறித்து கடந்த 10ம் திகதி மஹிந்த ராஜபக்ஷ யாழ்ப்பாணத்தில் பிரச்சாரம் செய்யும் போது அறிவிக்கவுள்ளார் என அவரின் சகோதரரும் ஜனாதிபதி ஆலோசகருமான பஷில் ராஜபக்ஷ முன்னர் உறுதிமொழி வழங்கியிருந்தார். எனவே மக்களும் மிகுந்த ஆவலுடன் மஹிந்த ராஜபக்ஷவின் வரவை எண்ணிக் காத்திருந்த போது அப்பகுதி மீள்குடியமர்வு குறித்து எதுவித வார்த்தையும் ஜனாதிபதி பேசவில்லை அதனால் மக்களுக்கு மிகுந்த ஏமாற்றமாகி விட்டது. பின்னர் இடம்பெயர்ந்த மக்களை அமைதிப்படுத்தும் விதமாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடந்த செவ்வாய்க்கிழமை தெல்லிப்பழையில்அவர்களை சந்தித்துள்ளார். அப்போது மீள்குடியமர்வதற்காக அதற்குரியவர்களுடன் தாம் பேசவுள்ளதாக டக்ளஸ் தேவானந்தா தெரிவித்த போது அந்த வாக்குறுதியில் தமக்கு நம்பிக்கை இல்லை என மக்கள் நேரடியாகவே தெரிவித்துள்ளனர் எனவும் அவ்வூடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக