ஞாயிறு, 24 ஜனவரி, 2010

ஜனாதிபதித் தேர்தலில் 1கோடியே 40லட்சத்து 88ஆயிரத்து 500பேர் வாக்களிக்கத் தகுதி..!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் 11ஆயிரத்து 98வாக்களிப்பு நிலையங்களில் இடம்பெறவுள்ளன. அத்துடன் வாக்குகளை எண்ணுவதற்கு 888மத்திய நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதித் தேர்தலில் நாடளாவிய ரீதியாக 1கோடியே 40லட்சத்து 88ஆயிரத்து 500பேர் வாக்களிக்ககத் தகுதிபெற்றுள்ளனர். நாளைமாலை வாக்குப்பெட்டிகளுடன் வாக்களிப்பு நிலையங்களுக்கு பொலீசார் அனுப்பி வைக்கப்படவுள்ளனர். நாளை மறுதினம் காலை 7மணிமுதல் பிற்பகல் 4மணிவரை வாக்களிப்பு நடைபெறும்போது பொலீசார் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவரென்று பிரதிப் பொலீஸ் மாஅதிபர் காமினி நவரத்ன தெரிவித்துள்ளார். இதேவேளை வாக்களிப்பு நிலையங்களின் பாதுகாப்பை முன்னிட்டு விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு வாக்களிப்பு நிலையத்திலும் இரு பொலீசார்வீதம் கடமையில் ஈடுபடுத்தப்படுவர். பாதுகாப்பு அதிகமாக வழங்கப்பட வேண்டிய வாக்களிப்பு நிலையங்களில் ஆறு பொலீசார்வரை ஈடுபடுத்தப்படுவர். வாக்களிப்பு நிலையங்களில் ஏதேனும் அச்சுறுத்தல்கள் ஏற்படின் அதனைக் கட்டுப்படுத்த குறைந்தபட்ச நடவடிக்கை எடுப்பதற்கு பொலீஸ் அதிகாரிகளுக்கும், உத்தியோகத்தர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக