ஞாயிறு, 17 ஜனவரி, 2010
விடுவிக்கப்பட்ட தமிழ்க்கூட்டமைப்பு எம்.பி கனகரத்தினம் ஜனாதிபதிக்கு ஆதரவுப் பிரச்சாரம்..!!
கடந்த 13ம்திகதி தடுப்பு காவலிலிருந்து விடுவிக்கப்பட்ட தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி சதாசிவம் கனகரத்தினம் தான் பல்வேறு நிபந்தனைகளின் பேரிலேயே விடுவிக்கப்பட்டுள்ளதாக தனது உறவினர்களிடம் தெரிவித்துள்ள நிலையில் நேற்று முன்தினம் காலையில் வன்னிப்பிரதேசத்தில் மீள்குடியமர்த்தப்பட்ட பிரதேசங்களுக்கு சென்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டுள்ளதாக வன்னித்தகவல்கள் தெரிவிக்கின்றன. மல்லாவி யோகபுரம் பகுதியில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்துகொண்ட கனகரத்தினம் எம்.பி மீளக்குடியமர்த்தப்பட்ட மக்களுக்கு 50மூன்று சக்கர உழவு இயந்திரங்களையும் 50தையல் இயந்திரங்களையும் வழங்கி வைத்துள்ளார். அரசாங்கத்தால் வழங்கப்பட்ட இந்த உபகரணங்களை வழங்கிய கனகரத்தினம் எம்.பி எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்சவுக்கே ஆதரவளிக்க வேண்டுமென்றும் மக்களை கேட்டுக் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது..
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக