வெள்ளி, 15 ஜனவரி, 2010
துப்பாக்கி முனையில் அகதிகளை இறக்கும் முயற்சியில் இந்தோனேசியா..!!
அவுஸ்திரேலியா செல்ல விடுமாறு போராட்டம் நடத்தியபடி தமது மரப்படகில் கடந்த 3மாதங்களாக தங்கியுள்ள இலங்கை தமிழ் அகதிகளையும் அடுத்தவார முடிவிற்கிடையில் குடிவரவு தற்காலிக முகாம்களுக்கு பலவந்தமாக கொண்டு செல்லும் முடிவில் உள்ளது இந்தோனேசியா. மேற்படி 240 பேரில் முன்னாள் விடுதலைப்புலிகள் சிலர் இருந்து அவர்கள் தான் மிகுதிப்பேரை வழிநடத்துவதாக இந்தோனேசியா கருதுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது தேவைப்படின் துப்பாக்கிமுனையில் தமிழ் அகதிகளை தரையிறக்கும் முடிவில் உள்ளது இந்தோனேசியா. மேற்படி படகிலுள்ள பலரும் தரையிறங்க விரும்புகின்ற போதும் படகிலுள்ள முன்னாள் புலி உறுப்பினர்கள் அவர்களைத் தடுத்து வருவதாக தமக்கு இராணுவ புலனாய்வுத் தகவல் மூலம் தெரிய வந்துள்ளது என சிரேஷ்ட குடிவரவு அதிகாரியான ஹாரி புர்வான்ரோ தெரிவித்துள்ளார். இலங்கையிலிருந்து அகதிகளாக வெளியேறுபவர்கள் ஒன்றில் புலிஉறுப்பினர்களாக அல்லது அவர்களின் குடும்பத்தவர்களாக இருக்க வேண்டும் இந்த அகதிகள் தொடர்பான விடயத்தை இம்மாதத்தில் முடிவுக்கு கொண்டுவர இருப்பதாகவும் அதற்காக இன்று குடிவரவு குடியகல்வு மற்றும் வெளிவிவகாரர அமைச்சு அதிகாரிகள் கலந்துரையாடவுள்ளதாகவம் புர்வான்ரோ மேலும் தெரிவித்துள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக