செவ்வாய், 5 ஜனவரி, 2010

சில வீதிகள் திறக்கப்படாமையால் கிளிநொச்சியில் மீள்குடியமர்ந்த மக்கள் பெரும் சிரமம்..!!

மக்களின் பாவனைக்காக சில வீதிகள் திறக்கப்படாமை காரணமாகப் கிளிநொச்சி மாவட்டத்தில் மீளக் குடியமர்த்தப்பட்ட மக்கள் தமது அத்தியாவசிய தேவைகளுக்காக சென்று வருவதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அக்கரையான் அம்பலப் பெருமாள் சந்தி முழங்காவில் ஜெயபுரம் போன்ற இடங்களில் வசிக்கும் மக்கள் கிளிநொச்சிக்கு வருவதற்கு பிரதான வீதிகள் அனுமதிக்கப்படாமையால் துணுக்காய் மல்லாவி மாங்குளம் சென்று கண்டி வீதியூடாக கிளிநொச்சிக்கு வரவேண்யிருப்பதாக பிரதேச வாசியொருவர் தெரிவித்தார். விசேடமாக சிகிச்சை மற்றும் பொருட்கொள்வனவுக்காக கிளிநொச்சிக்கு வரும் மக்கள் தமது தேவவைகளை நிறைவு செய்து கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே வன்னியில் மீள்குடியேற்றம் மற்றும் அபிவிருத்திக்கான அமைப்பின் பிரதிநிதிகள் கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்து மீள்குடியேறும் மக்களின் அடிப்படை வசதிகள் மற்றும் போக்குவரத்து தேவைகளை நிறைவு செய்து தருமாறு விடுத்த வேண்டுகோளை அடுத்து ஜனாதிபதியின் விசேட ஆலோசகர் பஷில் ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி ஆகியோரை இந்த அமைப்பின் பிரதிநிதிகள் நேரடியாக சந்திக்க அமைச்சர் அவர்கள் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக