செவ்வாய், 5 ஜனவரி, 2010
கொழும்பு வெலிக்கடைச் சிறையில் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டம்..!!
கொழும்பு வெலிக்கடைச் சிறைச்சாலைக் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டமொன்றில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டம் இன்றுகாலை முதல் இடம்பெற்று வருவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த சிறைச்சாலையின் ஜீ.எச் மற்றும் ஜே ஆகிய பிரிவுகளில் உள்ள சுமார் 96 கைதிகளே இவ்வாறு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. தங்களுக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டும் அல்லது பிணையில் செல்ல அனுமதிக்க வேண்டுமென்று கோரியே அவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை நீதியமைச்சர் மிலிந்த மொறகொட தங்களைப் பார்வையிட வேண்டுமென்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக