வியாழன், 21 ஜனவரி, 2010

நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பவே ஜனாதிபதி மீண்டும் 6வருடத்தை மக்களிடம் கோருகின்றார் -அமைச்சர் செனிவிரத்ன..!!

யுத்தத்தின் பின் நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பவே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மீண்டும் 6வருடத்தை மக்களிடம் கோருகின்றார் என மின்சக்தி எரிசக்தி அமைச்சர் டபிள்யூ .டி.ஜே.செனவிரத்ன தெரிவித்துள்ளார். இரத்தினபுரி புதிய நகரத்தில் அமைந்துள்ள சமுர்த்தி விருந்தகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் தலைமை வகித்து உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார். யுத்தம் முடிவடைந்த நிலையில் வடக்கில் மக்கள் தமது வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்வதற்காக வியாபாரம், சுயதொழில் விவசாயம் மற்றும் பல்வேறு வேலைத்திட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். யுத்தத்தின் பின் இப்பிரதேச மக்களுக்கு பாவனைக்காக 30 மெகாவாட் மின்சாரம் தேவைப்பட்டது. இன்று 24 மணித்தியாலத்திற்கு 48மெகாவாட் மின்சாரம் இம்மக்களின் தேவைகளைப் பூர்த்திசெய்ய தேவைப்படுகின்றது. அரசாங்கத்திலிருந்து தமிழ்மக்களை பிரிப்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி.யினர் பொது வேட்பாளரை நிறுத்தியுள்ளனர். தமிழ்க் கூட்டமைப்பினர் 13கோரிக்கைகளை முன்வைத்தே சரத் பொன்சேகாவை ஆதரிக்க இணங்கியுள்ளனர். அதில் 14 ஆயிரம்பேர் கடுமையான குற்றங்களை புரிந்த புலி உறுப்பினர்கள். தற்கொலைத் தாக்குதலுக்காக 6மாதம் மனநிலையை மாற்றப்பட்டவர்கள், வடக்கு, கிழக்கை மீண்டும் இணைத்தல் போன்றவையும் உள்ளடக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை அவர்கள் சந்தித்தபோது இவற்றுக்கு இணக்கப்பாடு தெரிவிக்கப்படவில்லை. இதனாலேயே இவர்கள் விலகிச்சென்றனர். இராணுவ தளபதிகள் ஆட்சியை மேற்கொண்ட வெளிநாடுகளில் இறுதியில் தோல்வியையே தழுவினர். ஆட்சிக்கு வந்ததும் தமது சர்வாதிகாரத்தை பயன்படுத்தி தனது கடுமையான சட்டங்களை மக்கள் மத்தியில் திணித்தனர். இதுவே சரத் பொன்சேகா ஆட்சிக்கு வந்தால் நடைபெறும். இன்று இரத்தினபுரி மாவட்டத்தில் கிராமங்களில் மின்சாரம், பாதை அபிவிருத்தி உட்பட அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொழில்வாய்ப்பு பெற்றுக்கொடுப்பது மிகவும் குறைவாகவே உள்ளது. 10 பேர் அரச உத்தியோகத்திற்கு தேவைப்பட்டால் 1000பேர் விண்ணப்பிக்கின்றனர். எவ்வாறு வழங்குவது. எதிர்காலத்தில் தேசிய உற்பத்தியை அதிகரிக்கச் செய்வதன்மூலமே அரசதுறையில் தொழில் வாய்ப்பினை பெற்றுக்கொடுக்கும் சூழ்நிலையேற்படும். கமநெகும, ஜாதிக சவிய வேலைத்திட்டங்களில் 68231 குடும்பங்கள் நன்மையடைந்துள்ளன. பாடசாலை அபிவிருத்தி, பௌதீக வளங்கள், வீடமைப்புத் திட்டம் ஆகியவையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக