பாதுகாப்பு தரப்பினர், காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் ஆகியோருக்கு கடந்த 30வருடங்களாக பயங்கரவாதிகளின் செயற்பாடுகளை முகம்கொடுக்கும் நிலை ஏற்பட்டதாக எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். மகரகமவில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்தக் காலகட்டத்தில் காவல்துறையினர், இராணுவத்தினர், ஊர்காவற்படையினர், பொதுமக்கள் பாதுகாப்புப்பிரிவினர் மற்றும் பொதுமக்கள் இக்கட்டான சூழலில் வாழ்ந்ததாக அவர் தெரிவித்துள்ளார். எனினும் இந்த சூழ்நிலையிலிருந்து மீள்வோமென்ற நம்பிக்கையில் செயற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளர். எவ்வாறாயினும் நாடு பிளவுபடாத வகையில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டதாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
சனி, 9 ஜனவரி, 2010
30வருடங்களாக பயங்கரவாதிகளின் செயற்பாடுகளுக்கு முகம்கொடுக்கும் நிலையேற்பட்டது -சரத் பொன்சேகா..!!
பாதுகாப்பு தரப்பினர், காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் ஆகியோருக்கு கடந்த 30வருடங்களாக பயங்கரவாதிகளின் செயற்பாடுகளை முகம்கொடுக்கும் நிலை ஏற்பட்டதாக எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். மகரகமவில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்தக் காலகட்டத்தில் காவல்துறையினர், இராணுவத்தினர், ஊர்காவற்படையினர், பொதுமக்கள் பாதுகாப்புப்பிரிவினர் மற்றும் பொதுமக்கள் இக்கட்டான சூழலில் வாழ்ந்ததாக அவர் தெரிவித்துள்ளார். எனினும் இந்த சூழ்நிலையிலிருந்து மீள்வோமென்ற நம்பிக்கையில் செயற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளர். எவ்வாறாயினும் நாடு பிளவுபடாத வகையில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டதாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக