வெள்ளி, 8 ஜனவரி, 2010

கிராமங்கள் தோறும் தொடரும் த.ம.வி.பு கட்சியின் ஜனாதிபதி தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள். முதல்வர் நேரடிப் பங்கேற்பு..!!

நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளர் மகிந்த ராஜபக்ஷ அவர்களை ஆதரிப்பதென எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் த.ம.வி.பு கட்சியானது கிராமங்கள் தோறும் தமது தேர்தல் பிரச்சார பணிகளை மேற்கொண்டு வருகின்றது.
அதனடிப்படையில் இன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கிராமங்களான பனிச்சங்கேணி, இராலோடை, ஆலங்குளம் ஆகிய கிராமங்களில் தமது பிரச்சார பணிகளை மேற்கொண்டிருந்தது. அக்கிராமங்களில் வாழ்கின்ற மக்களிடம் கருத்து தெரிவித்த கிழக்கு மாகாண முதலமைச்சரும் த.ம.வி.பு கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், எமது கட்சியானது நடைபெற உள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு ஆதரவு வழங்குவதென தீர்மானித்துள்ளது. இதற்கு மக்களாகிய உங்களது ஒத்துழைப்பும் ஆதரவும் இன்றியமையாத ஒன்றாக இருக்கின்றது. எமது கட்சியினை பொறுத்தவரை நாம் எடுத்திருக்கின்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இம்முடிவானது, கிழக்கு மாகாண மக்கள் அனைவருக்குமே ஒரு தீர்க்கமான முடிவினை எட்டக்கூடிய வகையில் அமைந்திருக்கும் என்பது எமது கட்சியின் எண்ணப்படாகும். எனவே நடைபெற உள்ள ஜனரிதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷ அவர்களுக்கே எமது வாக்குகளை வழங்குவதன் மூலம் எமது நாட்டிற்கு மீண்டும் ஒரு சரியான தலைவரை தேர்ந்தெடுத்த பெருமைக்குரியவர்களாக மாறுவதோடு, நலிவடைந்துள்ள எமது கிழக்கு மாகாணத்தை மீண்டும் கட்டியெழுப்ப ஒரு சந்தர்ப்பத்தினை ஏற்படுத்திக் கொள்வதாக இருக்கும். கிழக்கு மாகாணத்தில் வாழுகின்ற மக்கள் அனைவரும் ஒருமித்து ஜனாதிபதி வேட்பாளர் மகிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு வாக்களித்து அவரையே வெற்றிபெறச் செய்ய வேண்டும். இதற்கு எமது கட்சியுடன் இணைந்து அனைத்து மக்களும் ஒன்றிணைய வேண்டும எனவும் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து தற்போது ஊடகங்களில் சில உண்;மைக்கு புறம்பான கருத்துக்களை காணக்கூடியதாக இருக்கின்றது. இதனை கண்டு எமது மக்கள் எந்த ஒரு தயக்கமும் கொள்ளத்தேவையில்லை. உறுதியாக எமது கட்சி எடுத்திருக்கின்ற முடிவினை எமது மாகாண மக்களும் ஏற்றுக்கொண்டு மகிந்த ராஜபக்ஷ அவர்களுக்கே வாக்களித்து அமோக வெற்றியடையச் செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இச்சந்திப்புக்களின்போது இராலேடை கிராம மக்கள் எதிர்நோக்குகின்ற முக்கிய அடிப்படை பிரச்சினைகளாக காணப்பட்ட மின்சாரம், போக்குவரத்து,குடிநீர்,மருத்துவம் மற்றும் வடிகால் அமைப்பு போன்ற தேவைகளை நிவர்த்தி செய்து தருவதாகவும் முதல்வர் மக்களிடம் தெரிவித்தார்.
இச்சந்திப்புக்களின்போது மாகாண சபை உறுப்பிரும் த.ம.வி.பு. கட்சியின் பிரதித் தலைவருமான ஜெயம் மற்றும் கட்சியின் செயலாளர் எட்வின் சில்வா கைலேஸ்வரராஜா மற்றும் கட்சியின் முக்கிய உறுப்பிர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக