திங்கள், 21 டிசம்பர், 2009

அனைத்துப் பாடசாலைகளுக்கும் கணனி நிலையங்களை இவ்வாண்டுக்குள் நிறுவ அரசு திட்டம்.

இவ்வருட இறுதிக்குள் 5000 கணனி நிலையங்களை பாடசாலைகளில் அமைக்கும் திட்டம் பூர்த்தியடையுமென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. ஜனாதிபதி அவர்கள் 2009ஆம் ஆண்டினை தகவல் தொழில்நுட்ப ஆண்டாக பிரகடனம் செய்துள்ள நிலையில் இதுவரை 4000 கணனி நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளதாகவும், இவ்வருடத்தில் மிகுதி ஆயிரம் நிலையங்களும் நிறுவப்பட்டு விடுமென கல்வி அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் பின்தங்கிய பாடசாலைகள் இத்திட்டத்துக்கென முன்னுரிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் இத்திட்டத்தின் கீழ் அனைத்துப் பாடசாலைகளும் கணனிக் கல்வியை பெறும் வாய்ப்புக் கிட்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். கடந்தகால அசாதாரன சூழ்நிலைகளால் விசேடமாக வடக்கு கிழக்கில் பாதிப்புக்குள்ளான கல்வித் துறையை மீளவும் கட்டியெழுப்ப அரசு விசேட திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 21.12.2009 - திங்கட்கிழமை அனைத்துப் பாடசாலைகளுக்கும் கணனி நிலையங்களை இவ்வாண்டுக்குள் நிறுவ அரசு திட்டம். இவ்வருட இறுதிக்குள் 5000 கணனி நிலையங்களை பாடசாலைகளில் அமைக்கும் திட்டம் பூர்த்தியடையுமென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. ஜனாதிபதி அவர்கள் 2009ஆம் ஆண்டினை தகவல் தொழில்நுட்ப ஆண்டாக பிரகடனம் செய்துள்ள நிலையில் இதுவரை 4000 கணனி நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளதாகவும், இவ்வருடத்தில் மிகுதி ஆயிரம் நிலையங்களும் நிறுவப்பட்டு விடுமென கல்வி அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் பின்தங்கிய பாடசாலைகள் இத்திட்டத்துக்கென முன்னுரிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் இத்திட்டத்தின் கீழ் அனைத்துப் பாடசாலைகளும் கணனிக் கல்வியை பெறும் வாய்ப்புக் கிட்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். கடந்தகால அசாதாரன சூழ்நிலைகளால் விசேடமாக வடக்கு கிழக்கில் பாதிப்புக்குள்ளான கல்வித் துறையை மீளவும் கட்டியெழுப்ப அரசு விசேட திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக