புதன், 2 டிசம்பர், 2009

வன்கூவர் சிறையிலுள்ள இலங்கை அகதிகளின் பின்புல தகவல்களை இலங்கை அரசிடமிருந்து பெற கனடா ஆலோசனை!

கனடா வன்கூவர் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகள் 76பேருள் புலி உறுப்பினர்களும் இருக்கலாமென கனேடிய அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் அது தொடர்பில் உறுதிசெய்யும் பொருட்டு குறித்த 76பேரின் பின்புலத் தகவல்களை இலங்கை அரசிடமிருந்து பெறுவதற்கு கனடா ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. குறித்த அகதிகளுள் ஒருவரை நேற்று விசாரணைக்கு உட்படுத்தியபோது அவர் குறித்து உறுதிப்படுத்த முடியாத நிலையிலேயே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அகதி அந்தஸ்து கோரிய அந்த இலங்கையரை பாதுகாப்புகருதி தொடர்ந்தும் தடுத்து வைக்குமாறு கனடா அரசாங்க சட்டத்தரணி றொங்கமாச்சி தெரிவித்துள்ளார். கடந்த இரு மாதமாக குறித்த இலங்கை அகதிகள் கனடாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் கனடாவில் குடியேற்றப்பட வேண்டும் அல்லது நாட்டுக்கு திருப்பியனுப்பப்பட வேண்டுமென்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனினும் கனடாவின் பாதுகாப்பு கருதி அவர்களை குடியமர்த்துவதில் தாமதம் காட்டிவர வேண்டியநிலை காணப்படுவதாக கனேடிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக