புதன், 2 டிசம்பர், 2009

சரத்பொன்சேகாவின் கிரகநிலை சிறப்பாக அமைந்துள்ளது -அனோமா பொன்சேகா..

எதிர்கட்சிகளின் பொதுவேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேகாவி;ன் கிரகநிலை மிகவும் சிறப்பான முறையில் அமைந்துள்ளதென அவரது பாரியார் அனோமா பொன்சேகா தெரிவித்துள்ளார் ஜெனரலுக்கு சிறப்பான எதிர்காலம் இருப்பதாக நண்பர்களும் உறவினர்களும் ஜாதக பலன்களை அடிப்படையாக கொண்டு தெரிவி;த்துள்ளார்கள் என அவர் தெரிவித்துள்ளார். ஜோதிடத்தில் தங்களுக்கு நம்பிக்கை இல்லை எனவும் உறவினர்கள் இதுதொடர்பில் வலியுறுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சரத்பொன்சேகாவின் ஜாதகத்தை எடுத்துச் சென்ற அனைவரும் சிறந்த பலன் கிட்டும் என தெரிவித்துள்ளதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார். ஜெனரல் சரத்பொன்சேகாவின் அரசியலில் தான் ஈடுபடப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக