இலங்கை இராணுவத்தினரிடம் முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் நந்திக்கடல் பகுதியில் வைத்து மண்டியிட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்ட புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இன்னமும் உயிருடன் இருப்பதாகக் காட்டிக் கொள்வதற்கு புலிகள் தொடர்ச்சியாக பல பிரயத்தனங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இருந்தபோதிலும் அவர்களின் இந்த முயற்சியானது யதார்த்தத்தை விளங்கிக் கொண்டுள்ள மக்கள் மத்தியில் எடுபடுவதாகத் தெரியவில்லை. இந்த நடவடிக்கைகளின் ஒரு கட்டமாக பிரபாகரன் உயிருடன் இருப்பதாக காட்டிக் கொள்வதற்கு நேற்றையதினமும் புலிகளின் ஊடகங்களில் மீண்டுமொருமுறை முயற்சி எடுக்கப்பட்டது. பிரபாகரன் காட்டுப் பகுதியில் அஞ்சலி செலுத்துவது போன்று குறித்த புகைப்படத்தைப் பிரசுரித்திருந்தார்கள். இப்புகைப்படம் எங்கு எடுக்கப்பட்டதென்பதை "அதிரடி" இணையத்தினராகிய நாம் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். இந்தியப்படை இலங்கையில் பிரசன்னமாயிருந்த காலகட்டத்தில் அவர்களுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் உண்ணாவிரதமிருந்து உயிரிழந்த புலி இயக்க உறுப்பினர் திலீபனுக்கு பிரபாகரன் அஞ்சலி செலுத்திய போது எடுக்கப்பட்ட புகைப்படமே அதுவாகும். அந்தப் புகைப்படத்தை வெட்டி ஒட்டி குறித்த புகைப்படம் உருவாக்கப் பட்டுள்ளதென்பதை அதிரடி இணையம் அம்பலப்படுத்துகின்றது. இவ்வாறு மக்களை மீண்டும் மீண்டும் ஏமாற்றி அவர்களின் அமைதியான, நிம்மதியான வாழ்க்கையைச் சீர்குலைக்க வேண்டாமென புலம்பெயர்ந்த மக்களை ஏமாற்றி புலிகளுக்காக சேகரிக்கப்பட்ட பணம், சொத்துக்களில் சுகபோகமாக வாழ்ந்து கொண்டிருக்கும் சம்பந்தப்பட்டவர்களுக்கு "அதிரடி" இணையம் தெரிவித்துக் கொள்வதுடன், இவ்வாறான சம்பவங்களால் பாதிக்கப்பட்ட மக்களை படையினர் கொடுமைப்படுத்துவதற்கு வழிகோலாமல் அந்த மக்களை வாழ விடுங்கள் என்றும் கேட்டுக் கொள்கிறது. உயிரிழந்த பிரபாகரனை உயிருடன் இருப்பதாகக் காட்டிக்கொள்ள முயற்சிக்கும் இதுபோன்ற நடவடிக்கைகளான அப்பாவி மக்களை மேலும் மேலும் அவல நிலைக்குத் தள்ளி விடுமென்பதை நாம் மீண்டும் ஞாபகப்படுத்த விரும்புகிறோம். ..!!!! நன்றி அதிரடி.கொம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக