புதன், 30 டிசம்பர், 2009

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்திக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்..!!

இந்தவாரம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்திக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவினர் இந்தவாரம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்திக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்வாரம் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர்கள் சரத் பொன்சேகாவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தனர். ஜனாதிபதியுடன் இவ்வாரம் நடைபெறும் பேச்சு தீர்மானகரமான பேச்சாக இருக்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கே.துரைரட்ணசிங்கம் தெரிவித்துள்ளார். ஜெனரல் சரத் பொன்சேகாவுடன் கடந்தவாரம் நடைபெற்ற பேச்சின்போது தமது கோரிக்கைகளுக்கு தீர்வுகாண அவர் இணங்கினார் எனவும் எம்.பி குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இக்கோரிக்கைகள் குறித்து பேச்சுநடத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதெவும் துரைரட்ணசிங்கம் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக