செவ்வாய், 29 டிசம்பர், 2009

எரித்திரியாவில் உள்ள புலிகளின் விமானங்களை இலங்கைக்கு கொண்டுவர அரசு நடவடிக்கை..!!

எரித்திரியா நாட்டில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகளுக்கு சொந்தமான இலகு ரக விமானங்களை இலங்கைக்கு கொண்டுவர இலங்கையரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக சிங்கள வார இதழ்ழென்று செய்தி வெளியிட்டுள்ளது.அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: குமரன் பத்மநாதன் அரசுக்கு வழங்கிய தகவல்களின் படி புலிகளுக்கு சொந்தமான 10விமானங்கள் எரித்திரியாவில் உள்ள்தாகவும் அவை விமானிகளுக்கு பயிற்சியளிப்பதற்காக பயன்படுத்தப்படும் விமானங்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.எனினும் புதிய தகவல்களின்படி மேற்படி விமானங்களில் 6விமானங்கள் மாத்திரமே தற்போது எரித்திரியாவில் இருப்பதாகவும் ஏனைய விமானங்களுக்கு என்ன நடந்தது என்பது குறித்து விசாரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் ராஐதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேற்படி ஸெலின் 143 ரக விமானங்களை இலங்கைக்கு கொண்டுவருவது தொடர்பான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளுவதற்காக உயர்மட்ட தூதரக அதிகாரியொருவரை விரைவில் எரித்திரியாவுக்கு அனுப்புவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதெனவும் உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக