வியாழன், 31 டிசம்பர், 2009

இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே. காந்தா கடற்படைத் தளபதி சந்திப்பு..!

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே. காந்தாவிற்கும், இலங்கைக் கடற்படைத் தளபதி வைஸ்அட்மிரல் திசர சமரசிங்கவிற்குமிடையில் நேற்று பேச்சுவார்த்தையொன்று நடைபெற்றுள்ளது. இருதரப்பு உறவுகள் மற்றும் இலங்கை கடற்படை வீரர்களுக்கு இந்தியாவில் பயிற்சி வழங்குதல் போன்றவை தொடர்பில் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்திய உயர்ஸ்தானிகருடன், உயர்பாதுகாப்பு அதிகாரி கெப்டன் பிரதீப் சிங்கும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்தார். இருதரப்பு நட்புறவின் அடிப்படையில் இச்சந்திப்பு இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக