புதன், 23 டிசம்பர், 2009

விடுதலைப்புலிகளுக்கு பணம் சேகரித்ததாக மெல்போர்ன் நீதிமன்றில் மூவருக்கு எதிராக வழக்கு !!

விடுதலைப்புலிகளுக்கு பணம் சேகரித்ததாக ஆரூரன் விநாயகமூர்த்தி, சிவராஜா யாதவன் மற்றும் ஆறுமுகம் ரஜீவன் ஆகியோர் கடந்த 2007ல் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை இன்று மெல்போர்ன் உச்சநீதிமன்றில் விசாரிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மீது புதிய குற்றச்சாட்டுகள் பட்டியலிடப்பட்டதும் அவர்கள் குற்றத்தை ஒப்புக் கொள்வார்கள் என மேற்படி மூவருக்குமாக வாதாடுகின்ற வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். இன்றைய விவாதத்தின் போது இவர்கள் மூவரும் நீதிமன்றில் ஆஜராகவில்லை. குற்றம் சாட்டாப்பட்டவர்களுக்கு எதிராக மூன்றாவது குற்றத்துக்காக எதுவித சான்றுகளும் கிடைக்காத பட்சத்தில் அவர்களுக்கு எதிராக சாட்டப்பட்டுள்ள இரு குற்றங்களை அதாவது பணமும் மின்சார உபகரணங்களும் சேகரித்ததாக கூறப்படுவதை விநாயகமூர்த்தி ஏற்றுக்கொள்ளக் கூடும் என வக்கீல் கூறியுள்ளார். இந்த குற்றச்சாட்டுகள் குறித்து எதுவித தீர்வும் இன்னமும் வரவில்லை என்பதையும் அவர் நீதிமன்றில் சுட்டிக் காட்டியுள்ளார். யாதவன் மற்றும் ரஜீவன் ஆகியோருக்காக வாதாடும் வக்கீல்கள் கூறும்போது இவர்களும் கூட மேற்கூறப்பட்டுள்ளது போன்ற குற்றச்சாட்டுகளை ஏற்றுக் கொள்ளக்கூடும் எனக் கூறினர் எனவே இந்த வழக்கானது தீர்ப்பை நெருங்கியிருப்பதாக உச்சநீதிமன்றம் நம்பிக்கை தெரிவித்துள்ளதோடு வருகின்ற வியாழக்கிழமை வரை இது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக