நலன்புரி நிலையங்களில் உள்ள மக்களை மீளக்குடியமர்த்துவதில் ஜனாதிபதி மஹிந்த துரிதமாகச் செயல்பட்டுள்ளார். அத்துடன் 13ஆவது சட்டத் திருத்தத்திற்கு அமைவாக அரசியல் தீர்வுத் திட்டத்தை வழங்க ஜனாதிபதி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.இந்த இரண்டு காரணங்களின் அடிப்படையில் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு நாம் ஆதரவை வழங்க முன்வந்துள்ளோம். இவ்வாறு புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் புளொட் அலுவலகத்தில் நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டில் தெரிவித்தார்.
இந்த மாநாட்டில் அவர் மேலும் கூறியவை வருமாறு:ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான கட்சிகைளைச் சேர்ந்த இருவரும் தமிழ் மக்களுக்கான தீர்வுத் திட்டத்தைத் தரப்போவதில்லை. இருப்பினும் மஹிந்த ராஜபக்ஷவின் சில முன்மாதிரியான நடவடிக்கைகளை வைத்துப்பார்க்கும் போது சில காரியங்களை அவர் செய்வார் என நம்புகிறோம். இதனால்தான் மஹிந்த ராஜ பக்ஷவுக்கு ஆதரவை வழங்க நாம் தீர்மானித்தோம். எங்களைப் பொறுத்தவரை நலன்புரி நிலையங்களில் உள்ள மக்களை விடுவித்துஇ அவர்களை உடனடியாகக்குடிய மர்த்தும்படி ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தோம். அதன் பிரகாரம் கடந்த 6 மாதங்களில் அவர்கள் விடுவிக்கப்பட்டு மீள்குடியேற்றப்பட்டு வருகின்றனர். இம்மக்களை எமது கட்சி நேரில் போய்பார்வையிட்டது. எமது இக்கோரிக்கை நிறைவேற்றப்பட்டமையாலும்இ தீர்வுக்கான அடிப்படை விடயங்களில் ஜனாதிபதி கவனமெடுத்து வருவதாலும் மஹிந்தவை நாம் ஆதரிக் கின்றோம்.
மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்க முடியாது. அப்படி ஒரு ஆயுதப் போராட்டத்தை ஆரம்பிக்கும் நிலையில் நாம் இல்லை. யுத்தம் முடிவுக்கு வந்தபின்னர் எமது அமைப்பின் நிலைப்பாடு முற்று முழுக்க மாறிவிட்டது. நாம் முற்று முழுக்க ஜனநாயக வழியிலேயே செயற்பட்டு வருகிறோம். அரசியல் தீர்வுஇ மீள்குடியேற்றம் ஆகிய விடயங்களில் தமிழ்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என நாம் விரும்புகிறோம். இதற்கு நாம் தயாராக இருக்கின்றபோதிலும் ஏனைய கட்சிகள் தயாராக இல்லை. தமிழ் பேசும் சக்திகள் ஒன்றுபட்டுச் செயற்பட்டால் இலங்கை அரசியலில் நாம் ஒரு பேரம் பேசும் சக்தியாக உருவாகலாம். அதற்கான அடித்தளம் இடப்படவேண்டும். சுவிஸ் மாநாட்டில் இடம்பெற்ற கலந்துரையாடல் மிக ஆரோக்கியமானது. தமிழ் பேசும் கட்சிகள் அங்கு ஒன்றாக இருந்தன. அவ்வாறான நிலை உருவாக்கப்பட வேண்டும். இது ஒரு நல்ல ஆரம்பமாகும்.
வடக்குஇ கிழக்கு இணைப்புத் தொடர்பாக கிழக்கிலிருந்தே குரல் எழுப்ப வேண்டும். கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் வடக்குஇ கிழக்கு இணைப்பை முன்வைத்துப் போட்டியிட்டவர்களில் இரா.துரைரத்தினம் மாத்திரமே உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் 22 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும் அதனையும் சாதிக்க முடியவில்லை. அனைவருடனும் இணைந்து செயல்பட நாம் தயாராக இருக்கிறோம். ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரில் இணையத் தயாராக இல்லை. அந்த அமைப்பை வேறு ஒரு பெயரில் புதிதாக உருவாக்கி அந்த அமைப்புடன் ஒன்று பட்டுச் செயற்பட நாம் தயாராக இருக்கிறோம். எங்கள் மத்தியில் ஒருமித்த கருத்துஇ பன்முகத்தன்மை இருக்க வேண்டும். ஏகப்பிரதிநிதித்துவம் என்பது இருக்கக் கூடாது. ஜனநாயகம்இ பன்முகத்தன்மைஇ ஒருமித்த கருத்து இருந்தால்தான் அரசியலில் ஆரோக்கியமான சூழல் எம் மத்தியில் ஏற்பட வாய்ப்புண்டு. ஜே.வி.பி அழிக்கப்பட்ட போது அந்த அமைப்பிலிருந்த போராளிகளும் எதுவித பிரச்சினைகளுமின்றிச் சுதந்திர நடமாட்டத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். அதேபோல புனர்வாழ்வு முகாம்களில் உள்ள புலிகள் நிபந்தனையின்றி விடுவிக்கப்பட வேண்டும் என்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக