செவ்வாய், 15 டிசம்பர், 2009

இலங்கையர்கள் 78பேரையும் ஏற்றுக்கொள்ள சுவீடன் மறுப்பு !

ஓசியானிக் வைக்கிங் கப்பலில் இருந்து வெளியேறிய 78பேரை மீள தமது நாட்டில் குடியமர்த்துவதற்கு முன்வைக்கப்பட்ட கோரிக்கையை சுவீடன் அரசாங்கம் நிராகரித்துள்ளது இந்த வருடத்தில் மாத்திரம் அதிக அளவிலான சட்டவிரோதப்படகுகள் அவுஸ்திரேலியாவை அடைந்துள்ள நிலையில் அகதிகளன் எண்ணிக்கையும் கூடியுள்ளதாலேயே இந்த நிராகரிப்பு இடம்பெற்றுள்ளது இதற்கிடையில் கடந்த வெள்ளிக்கிழமை 10 இலங்கைத் தமிழர்கள் அடங்கிய அகதிகள் குழு ஒன்று பிரிஸ்பேர்ண் கடற்பரப்பை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை 12வாரங்களுக்குள் குடியமர்த்தப்படுவாக அவுஸ்திரேலிய அரசாங்கம் வழங்கிய உறுதிமொழியை அடுத்து இந்தோனேசியாவில் தரையிறங்க ஓசியானிக் வைக்கிங் அகதிகள் சம்மதித்தனர் இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் அகதி குடியமர்த்தல் ஒப்பந்தத்தில் உள்ள நாடு என்ற அடிப்படையில் சுவீடனில் அவர்களை குடியமர்த்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன எனினும் அந்த கோரிக்கைளை சுவீடன் அரசு நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக