ஞாயிறு, 13 டிசம்பர், 2009

வாகன இறக்குமதியாளர்கள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சந்திப்பு!

வெளிநாடுகளிலிருந்து வாகனம் இறக்குமதி செய்வோர் முகங்கொடுக்கும் பிரச்சினைகளை இலகுபடுத்தவும் அவர்களுக்கு நிவாரணம் வழங்கவும் நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வாகன இறக்குமதியாளர்களுடனான சந்திப்பொன்று நேற்று அலரிமாளிகையில் நடைபெற்போது அவர்களின் பிரச்சினைகளுக்குச் செவிமடுத்த ஜனாதிபதி இவ்வாறு பதிலளித்துள்ளார். வாகன இறக்குமதியாளர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளை ஆராயும் வகையில் நாம் ஆணைக்குழுவொன்றை நியமித்துள்ளதுடன், அங்கு முறைபாடுகளை செய்யக்கூடிய வசதிகளையும் நாம் ஏற்படுத்திக் கொடுத்திருந்தோம். சகல பிரச்சினைகளுக்கும் இப்போது தீர்வுகாணப்பட்டு வருகின்றன. இந்தவகையில் வாகனம் இறக்குமதி நடவடிக்கையில் முகங்கொடுக்க நேரும் பிரச்சினைகளிலும் நாம் கவனம் செலுத்தியுள்ளோம். அதற்கிணங்க அவர்களுக்கு நிவாரணமொன்றை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். வாகன இறக்குமதிக்கான சுங்கவரி அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் புதிய வாகனங்களுக்கும் பாவித்த வாகனங்களுக்கும் ஒரேவிதமாக வரிஅறவிடப்பட்டு வருவதாகவும் இறக்குமதியாளர்கள் குறிப்பிட்டுள்ளதுடன், கடந்த காலங்களைப் போன்று தொடர்ந்தும் ஜனாதிபதிக்கே தமது முழுமையான ஆதரவினை வழங்குவதாகவும் அவர்கள் உறுதியளித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக