ஞாயிறு, 13 டிசம்பர், 2009
பெருமளவு ஆயுதங்களுடன் வடகொரியாவில் இருந்து இலங்கைக்கு வந்து கொண்டிருந்த விமானம் தாய்லாந்தில் தடுத்து வைப்பு, ஆயுதங்கள் பறிமுதல்!
பெரும்தொகையான ஆயுதங்களுடன் வடகொரியாவில் இருந்து இலங்கை நோக்கி வந்துகொண்டிருந்த விமானம் ஒன்று தாய்லாந்தில் தடுத்து வைத்து பறிமுதல் செய்யப்பட்டதாக நேற்றிரவு பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. தாய்லாந்தின் டொன்மியூங் விமான நிலையத்தில் விமானம் ஒன்று அவசரமாக தரையிறங்கியது. எரிபொருள் நிரப்புவதற்காக தரைஇறக்கப்படுவதாகத் தெரிவித்து அவசரஅவசரமாக தரையிறங்கிய விமானத்தை தாய்லாந்து அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். அப்போது அந்த விமானத்தில் 35தொன் ஆயுதங்கள் இருக்கக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன காவிக் செல்லக்கூடிய பீரங்கி ஆயுதங்கள், றொக்கட் புறோப்பெலர்கள், ஆர்.பி.ஜி கிரனேட்டுக்கள், விமான எதிர்ப்புப் பீரங்கிகள் ஆகியன அந்த விமானத்தில் வைக்கப்பட்டிருந்தன என்று தாய்லாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரஷ்யத் தயாரிப்பான ஐ.எல்.ஆயுத வான் விநியோக யுத்த விமானத்தை நூற்றுக்கும் மேற்பட்ட தாய்லாந்துப் படையினர் சோதனை செய்தனர். இந்த விமானத்தையும் விமானத்தில் இருந்த பிலோரஷ்யன் ஒருவரையும் கஹ கஸ்தானியர்கள் நால்வரையும் தாய்லாந்து அதிகாரிகள் தடுத்து வைத்துள்ளனர். இலங்கையில் போர் முடிவடைந்தபோதிலும் விமானம்மூலம் அங்கு ஆயுதங்கள் இதற்கு முன்னரும் எடுத்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்று தாய்லாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சம்பந்தப்பட்ட விமானம் நேற்றுக்காலையிலும் டொன்மியூங் விமான நிலையத்தில் எரிபொருள்களை நிரப்பிக்கொண்டு வடகொரியா நோக்கிச்சென்றது என்றும் அங்கிருந்து திரும்பிவந்து நேற்றுப் பிற்பகலிலும் எரிபொருள் நிரப்புவதற்கு தரைஇறங்கக் கேட்டதாகவும் இதற்கிடையில் அமெரிக்காவுக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான வான்போக்குவரத்து ஒப்பந்தத்துக்கு இணங்க குறிப்பிட்ட விமானம் கனரக ஆயுதங்களுடன் வருவதாக அமெரிக்கா தாய்லாந்து விமானநிலைய அதிகாரிகளுக்கு அறிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து தாய்லாந்து அதிகாரிகளும் குறிப்பிட்ட விமானத்தை இறங்க அனுமதித்து அதனையும் ஆயுதங்களையும் பறிமுதல் செய்து வைத்துள்ளனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக