ஞாயிறு, 13 டிசம்பர், 2009

இராணுவ ஆட்சியில் ஆர்வம் இருப்பின் அதனை ஆட்சியிலிருந்த போதே செய்திருப்பேன் -சரத் பொன்சேகா

இராணுவ ஆட்சியில் எனக்கு ஆர்வம் இருந்திருந்தால் அதனை யுத்தம் வெல்வதற்கு முன்பே செய்திருப்பேன். ஆனால் நான் ஒழுக்க கட்டுப்பாடுள்ள இராணுவத்தை தளபதியாக வழிநடத்திய ஒழுக்கமிக்க ஒரு ஜெனரல் எனNவு அப்படிச் செய்ய மாட்டேன் இப்படி தெரிவித்துள்ளார் முன்னாள் இராணுவத்தளபதியும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்கட்சிகளின் பொதுவேட்பாளரான ஜெனரல் சரத்பொன்சேகா. அசோசியட்டட் பிரஸ் செய்திச் சேவைக்கு அளித்த பேட்டியிலேயே இதனை அவர் தெரிவித்துள்ளார் அப்பேட்டியில் அவர் மேலும் தெரிவிக்கையில் யுத்தவெற்றி என்ற போர்வையின் கீழ் யாராவது தனது குடும்பத்தின் கௌரவத்தை உயர்த்த முயன்றால் அல்லது தனது விசுவாசிகளின் குடும்பத்தினரை ஊக்குவித்தால் அது உண்மையான சமாதானமாக அமையாது. அமைதி திரும்பி விட்டது என நீங்கள் சொல்ல முடியாது நான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகளவு அதிகாரங்களை குறைப்பேன் நாடாளுமன்றைப் பிரதமரின் தலைமையின் கீழ் பலப்படுத்துவேன் இராணுவ ஆட்சி பற்றி நான் ஆர்வம் கொண்டிருந்தால் எப்போதே அதனை செய்திருக்கலாம் யுத்தத்தை வெல்வதற்கு முன்னரே அதனை செய்திருக்க முடியும் நான் ஒரு ஒழுக்க கட்டுப்பாடு நிறைந்த இராணுவத்தளபதி என்று சுட்டிக் காட்டியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக