ஞாயிறு, 13 டிசம்பர், 2009

பிரான்ஸ் புலிகளின் தமிழீழ மக்கள் பேரவையினால் நடைபெற்ற “நாடுகடந்த தமிழீழத்திற்கான” வாக்களிப்பு பிசுபிசுப்பு…

பிரான்ஸில் உள்ள பிரான்ஸ் புலிகளின் தமிழீழ மக்கள் பேரவையினால் நாடுகடந்த தமிழீழத்திற்கான வாக்கெடுப்பு பிரான்ஸின் 30 இடங்களில் நடைபெற்றது. பிரான்ஸ் வாழ் தமிழர்கள் ஆர்வத்துடன் இந்த வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. புலிகளின் ஆதரவாளர்கள் தவிர்ந்த பொதுமக்கள் இதில் கலந்து கொள்வதை தவிர்த்துக் கொண்டனர். வாக்களிப்புக்கு வழங்கப்பட்ட ஆம், இல்லை என்கிற சீட்டுக்குப் பதிலாக பல இடங்களில் ஆம் என்கிற சீட்டு மட்டுமே வழங்கப்பட்டிருந்தது. வாக்களிப்பு பல இடங்களில் நடைபெறாது என புலிகளின் இன்னொரு பகுதியினரால் நடாத்தப்பட்டு வரும் ஜீ.ரீவி. வானொலி அறிவித்ததை புலிகள் ஆதரவு இணையத்தளமான பதிவு டொட்.கொம் மறைமுகமாக கண்டித்து செய்தி ஒன்றை நேற்று வெளியிட்டிருந்தது. புலம்பெயர்நாடுகளில் உள்ள புலிகளுக்குள் பிளவு ஏற்பட்டு ஒருவரையொருவர் தாம்தான் புலிகளின் உண்மையான வாரிசாக காட்டிக்கொள்ள கடும் பிராயத்தனம் எடுத்து வருகின்றனர். இத்தகைய போக்கினால் புலிகளில் இருந்து அதிருப்தியாளர்கள் பலர் வெளியேறி வருகின்றனர். புலிகளின் ஊர்வலங்கள், நிகழ்வுகளில் முன்பு போல் மக்கள் அக்கறை கொண்டு கலந்து கொள்வதை தவிர்த்து வருகின்றனர். பலமாக இருந்த காலத்திலேயே தமிழீழம் கிடைக்கவில்லை. நாடு கடந்து என்னத்தை வெட்டிக் கிழிக்கப் போகிறார்கள் என்கிற போக்கே புலம்பெயர் தமிழ்மக்களிடம் காணப்படுகிறது. நாட்டில் செய்ய முடியாததை நாடு கடந்து செய்து காட்டுவோம் என மக்களை ஏமாற்றுகின்ற இந்த வாக்களிப்புக்கள் பிசுபிசுத்துப்போவதை கண்முன்னே காணக்கூடிதாக உள்ளது. மாவீரர் தினத்திலன்று பிரபாகரன் மாவீரர் உரையாற்றுவர் என நம்பியிருந்த தமிழ்மக்கள் பலர் பிரபாகரன் இறந்து விட்டதை தற்போது நம்பத் தொடங்கியுள்ளனர். புலிகளின் பிரச்சார ஊடகங்கள் மீதான நம்பிக்கை ஆட்டம் கண்டு வருகிறது. புலிகளின் தீவிர ஆதரவாளர்கள் தவிர்ந்த ஏனையோர் நாடுகடந்த தமிழீழத்திற்கு எதிரான கருத்துக்களையே தற்போது வெளிப்படுத்தி வருகின்றனர். சர்வதேசம் அங்கீகரிக்காத விடுதலைப்புலிகளின் ஆயுதப்போராட்டம் முள்ளிவாய்க்காலோடு அஸ்தமித்து விட்டது. இந்நிலையில் நம்பிக்கையிழந்து போயிருக்கின்ற புலம்பெயர்வாழ் தமிழ்மக்கள் மத்தியில் புலம்பெயர்ந்து வாழும் புலிகள் எதையாவது ஒன்றை செய்து பழைய பணச்சுரண்டலை தக்கவைத்துக் கொள்ள முயல்கின்றனர். இதன் வெளிப்பாடுதான் நாடுகடந்த தமிழீழத்திற்கான வாக்களிப்பு. இது முடிய நாடுகடந்த தமிழீத்திற்கான தலைவர் யார் என்னும் வாக்களிப்பு. பொறுத்திருந்து பார்ப்போம் இந்தக்கூத்துக்களை…. Thanks… THENE

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக