சனி, 5 டிசம்பர், 2009

ஜனாதிபதி தேர்தலுக்காக கட்டுப்பணம் செலுத்தியிருக்கும் ஆறு அரசியல் கட்சிகளின் விபரம் !

ஜனாதிபதித் தேர்தலுக்காக 06அரசியல் கட்சிகள் இன்றுவரை தமது கட்டுப்பணத்தைச் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார். அதன்படி ஐக்கிய சமாஜவாத கட்சி சார்பாக ஸ்ரீதுங்க ஜயசூரியவும், யாவரும் இந்நாட்டு மக்களே யாவரும் மன்னர்களே அமைப்பின் சார்பாக எம்.பி நெமினிமுல்லவும், இலங்கை முற்போக்கு முன்னணி சார்பாக ஜே.ஏ.பீற்றர் நெல்சன் பெரேராவும் தமது கட்டுப்பணத்தைச் செலுத்தியுள்ளனர். அத்துடன் புதிய சிஹல உறுமய கட்சியின் சார்பாக சனத் மனமேந்திர, தேசிய அபிவிருத்தி முன்னணி சார்பாக அச்சல அசோக சுரவீர, இலங்கை தொழிலாளர் கட்சி சார்பாக பீரி.பியசிறி லியனகே ஆகியோர் தமது கட்டுப்பணத்தைச் செலுத்தியுள்ளனர். இந்நிலையில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பிரதான அரசியல் கட்சிகளோ, சுயேட்சைக் குழுக்களோ கட்டுப்பணத்தை இதுவரை செலுத்தவில்லையெனவும் தேர்தல்கள் ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக