சனி, 5 டிசம்பர், 2009

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்திச் செல்லப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த 07 இலங்கையர்களும் விடுதலை!

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்திச்செல்லப்பட்டு சுமார் 6மாதகாலமாக தடுத்துவைக்கப்பட்டிருந்த 7இலங்கையர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். நியூசிலாந்தின் எம்வீசார்ளீ என்ற கப்பலுடன் குறித்த 07இலங்கையர்களும் கடந்த ஜுன்மாதம் 12ம்திகதி தெற்கு ஓமான் கடற்பரப்பில் வைத்து சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்திச்செல்லப்பட்டிருந்தனர். இந்நிலையில் நியூசிலாந்து கப்பல் நிறுவனத்துக்கும், சோமாலிய கடற்கொள்ளையர்களுக்கும் இடையிலான நீண்டநாட்கள் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே பல பேச்சுவார்த்தைகள் தோல்விகண்ட நிலையில் தற்போது அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக