திங்கள், 30 நவம்பர், 2009
பொய்யான பிரச்சாரங்களைச் செய்வதன் மூலம் எதிர்க்கட்சிகளை பலவீனமடையச் செய்ய முடியாது -ஐக்கிய தேசியக் கட்சி
பொய்யான பிரச்சாரங்களைச் செய்வதன் மூலம் எதிர்க்கட்சிகளை பலவீனமடையச் செய்ய முடியாதென ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது, மக்களுக்கு தொடர்ந்தும் பொய்யான வாக்குறுதிகளை வழங்காமல் எதிர்கால செயற்பாடுகள் குறித்து உண்மையான கருத்துக்களை வெளியிடுமாறு அக்கட்சி மேலும் தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அக்கட்சியின் எம்.பி லக்ஸ்மன் கிரியெல்ல இதனைத் தெரிவித்துள்ளார். கூட்டுப்படைகளின் முன்னாள் பிரதானி ஜெனரல் சரத்பொன்சேகாவின் பாதுகாப்பு குறித்து அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டுவரவுள்ளதாகவும் தெரிவித்தார். ஜெனரல் சரத்பொன்சேகா சேவையில் இருந்தபோது அவாருக்கு 600பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் வழங்கப்பட்டிருந்ததாகவும், அவர் சேவையிலிருந்து ஓய்வு பெற்றபின் வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை 25ஆக குறைக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். அதன்பின்னர் ஜெனரல் சரத்பொன்சேகா நீதிமன்றில் மனு தாக்கல் செய்தபின் உடனடியாக அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை 60ஆக அதிகரிக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக