திங்கள், 30 நவம்பர், 2009
மாந்தை மேற்கில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மக்களுக்கு இராணுவத்தினர் சைக்கிள் அன்பளிப்பு..
மன்னார் மாந்தை மேற்கில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மக்களின் போக்குவரத்திற்காக இராணுவத்தினர் சைக்கிள்களை வழங்கியுள்ளனர். இந்நிகழ்வு மன்னார் 215ஆவது படைப்பிரிவில் சிவில் நிர்வாகத்துக்குப் பொறுப்பான கேர்ணல் நலிந்த தலைமையில் இன்றுமுற்பகல் 11மணியளவில் நடைபெற்றுள்ளது. இதன்போது சுமார் 300 சைக்கிள்கள் மாந்தை மேற்கில் மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு இராணுவத்தினரால் வழங்கப்பட்டுள்ளன. அண்மையில் மாந்தை மேற்கில் மக்கள் மீள்குடியேற்றப்பட்ட பிரதேசத்திற்கு புளொட் தலைவர் த.சித்தார்த்தன் அவர்கள் சென்றிருந்த போது அந்த மக்கள் தமது போக்குவரத்துக்கான வசதிகளைச் செய்து தருமாறும், குறைந்தபட்சம் ஒரு குடும்பத்திற்கு ஒரு சைக்கிளாவது பெற்றுத் தருமாறும் கோரியிருந்தனர். இக்கோரிக்கையை புளொட் தலைவர் வடக்கின் வசந்தம் திட்டத்தின் பணிப்பாளரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான பசில் ராஜபக்ச எம்.பியின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தமையும், இதுகுறித்து உரிய நடவடிக்கை விரைவில் எடுக்கப்படுமென அவர் குறிப்பிட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக