வியாழன், 3 டிசம்பர், 2009
படகிலுள்ள இலங்கை அகதிகள் 250பேரும் போராட்டத்தைக் கைவிட்டு தரையிறங்குமாறு அலெக்ஸின் தாயார் கோரிக்கை!!
இந்தோனேஷியாவின் மரிக்துறை முகத்துக்கு அருகில் நிறுத்தப்பட்டிருக்கும் படகில் தங்கியுள்ள 250 இலங்கை அகதிகளை போராட்டத்தைக் கைவிட்டு இந்தோனேஷியாவில் தரையிறங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இக்கோரிக்கையை மேற்படி அகதிகள் குழுவின் தலைவர் எனக்கூறப்படும் அலெக்ஸ் என்ற சஞ்சித் குகேந்திரராஜாவின் தாயார் சத்தியா ராஜரட்ணம் முன்வைத்துள்ளார். இலங்கை அகதிகள் 250பேரும் தொடர்ந்து படகில் தங்கியிருப்பதில் எந்தப் பயனுமில்லை. இந்தோனேஷியக் கடற்துறை அதிகாரிகளின் கருத்துக்கு இணங்கி படகிலிருந்து வெளியேறி இந்தோனேஷியாவில் தரையிறங்குமாறு அவர்கள் அனைவரிடமும் நான் கோரிக்கை விடுக்கின்றேன். இதேவேளை அவ்வாறு வெளியேறு வோர் இந்தோனேஷியாவில் தொடர்ந்து தங்கவைக்கப்பட மாட்டார்கள் என்பதனை உறுதி செய்யவேண்டும். இந்தோனேஷிய அதிகாரிகளிடமிருந்து இந்த உறுதிப்பாடு கிடைக்கும் பட்சத்தில் அவர்கள் படகிலிருந்து வெளியேறுவார்கள் என நான் நம்புகிறேன் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக