புதன், 2 டிசம்பர், 2009

15சிம் காட்டுடன் இலங்கை வாலிபர் இந்தியாவில் கைது.!!

திருவாரூர் அருகே மன்னார்குடி பகுதியில் வசித்து வந்த இலங்கை வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார் மோட்டார் பைக் ஒன்றை 2மாதமாக வாடகைக்கு எடுத்து அதனை திருப்பிக் கொடுக்காமல் இருந்த இந்த வாலிபர் அந்த கடை உரிமையாளரை தொடர்பு கொண்டு குறித்த இடத்திற்கு வந்து வாடகை பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு தெரிவித்திருந்தார் இதனையடுத்து அங்கு சென்ற வண்டியின் உரிமையாளர் அவரை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார். பொலிஸாரின் விசாரணையில் இவர் ஒரு இலங்கையர் எனவும் சுமார் 2வருடங்களுக்கு முன்னர் அவர் இந்தியா வந்ததாகவும் தெரிய வந்துள்ளது. அத்துடன் மேற்படி நபரை சோதனை செய்த போது அவரிடம் சுமார் 15 சிம்காட்டுகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். ஒவ்வொரு சிம்கார்டும் ஒவ்வொருவர் பெயரில் இருப்பதால் அவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைத்து பொலிஸார் விசாரித்து வருவதாக தெரிய வருகிறது. இருப்பினும் தனது நண்பர்களுடன் உரையாடவே இந்த சிம்கார்டுகளை தாம் வைத்திருந்ததாக அவர் தெரிவித்துள்ளதாக அறிய வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக