புதன், 2 டிசம்பர், 2009
இலங்கைக் கடற்பரப்பில் தத்தளித்துக் கொண்டிருந்த பன்னிரண்டு மியன்மார் மீனவர்கள் மீட்பு!
இலங்கைக் கடற்பரப்பில் தத்தளித்துக் கொண்டிருந்த பன்னிரண்டு மியன்மார் மீனவர்களை நேற்றுமாலை திருமலை மீனவர்கள் காப்பாற்றி கடற்படையினரிடம் ஒப்படைத்துள்ளனர். திருமலை கடற்பரப்பின் ஆழ்கடலில் 300மீற்றர் தொலைவில் இவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர். தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இவர்களின் படகு செயலிழந்த நிலையில் குறித்த மீனவர்கள் சத்தமிட்ட நிலையில் அங்கு விரைந்த இலங்கை மீனவர்கள் இவர்களைக் காப்பாற்றியுள்ளனர். இந்த மீனவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் எதுவுமற்ற நிலையில் மீன்பிடிப் படகிலிருந்த ஆவணங்களின் மூலம் இவர்கள் மியன்மார் நாட்டு மீனவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக