புதன், 2 டிசம்பர், 2009
பொதுநலவாய அமைப்பின் அடுத்த உச்சிமாநாடு அவுஸ்திரேலியாவில்.. 2013ல்இலங்கையில்..!
பொதுநலவாய அமைப்பின் அடுத்த உச்சிமாநாட்டை 2011ல் நடத்தும் வாய்ப்பை இலங்கை எதிர்பார்த்தபோதிலும் அது கிட்டவில்லை. அந்த வாய்ப்பு அவுஸ்திரேலியாவுக்கு வழங்கப்பட்டது. எனினும், ஆறுதல் பரிசாக 2013 உச்சிமாநாட்டை நடத்தும் வாய்ப்பு இலங்கைக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. 2011ல் நடைபெறவிருக்கும் அடுத்த மாநாட்டை நடத்தும் கௌரவம் தனக்குத் தரப்படவேண்டும் என இலங்கை கோரியிருந்தது. ஆனால், இலங்கையில் தற்போது மனிதஉரிமைகள் பேணப்படுவது தொடர்பான விவகாரம் சர்வதேச எதிர்ப்பு அலைகளை கிளப்பியுள்ள பின்னணியில், இந்த கௌரவத்தை இலங்கைக்கு உடனடியாக வழங்குவதற்கு பொதுநலவாய அமைப்பின் கூட்டத்திலும் பலத்த எதிர்ப்பு அங்கத்துவ நாடுகளில் காட்டப்பட்டது. இதனால் அடுத்த உச்சிமாநாட்டை நடத்தும் கௌரவம் அவுஸ்திரேலியாவுக்கு வழங்கப்பட்டது. இருப்பினும், 2013ல் இம்மாநாட்டை நடத்தும் கௌரவத்தை இலங்கைக்கும் , 2015ல் இம்மாநாட்டை நடத்தும் கௌரவத்தை மொறிஸியஸ{க்கும் வழங்க அண்மையில் இடம்பெற்று முடிந்த பொதுநலவாய அமைப்பின் உச்சிமாநாட்டில் தீர்மானம் எடுக்கப்பட்டது. பிரித்தானியப் பிரதமர் கோர்டன்பிறவுண் இது தொடர்பான திட்டத்தை மாநாட்டில் முன்மொழிந்தார். ஏனைய அங்கத்துவ நாடுகள் அதனை ஏற்றுக்கொண்டு தீர்மானத்தை நிறைவேற்றின.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக