சனி, 5 டிசம்பர், 2009

இறுதி யுத்தத்தின் போது அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்தவர்களில் 2500பேர் காணாமல் போனதாக முறைப்பாடு !

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்தவர்களில் 2500பேர் காணாமல் போயுள்ளதாக தமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக காணாமல் போனோரை தேடியறியும் குழு தெரிவித்துள்ளது. அவ்வாறு காணாமல் போனோர் 18வயது தொடக்கம் 35வயது வரையிலானவர்கள் 74வீதமாக இருப்பதாகவும் அக்குழு தெரிவித்துள்ளது. இவ்வாறு காணாமல் போனவர்களை கண்டறிய இதுவரையிலும் அரசாங்கம் உரிய நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்ளாதுள்ளது எனவும் அக்குழு குற்றஞ்சாட்டியுள்ளது. இந்நிலை தொடருமானால் அதற்கெதிராக பாரிய ஆர்ப்பாட்டங்களை செய்ய வேண்டியேற்படும் எனவும் காணாமற்போனோரை தேடியறியும் குழுவின் இணைப்பாளர் ஜெயநித்தி தெரிவித்துள்ளார். யுத்த நடவடிக்கையின்போது கை, கால்களை இழந்து ஊனற்ற படைவீரர்களுக்கும் உயிழந்த படைவீரர்களின் குடும்பத்திற்கும், கடந்த ஜே.வி.பி கலவரத்தின் போது பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கும் அரசாங்கம் நஷ்டஈட்டை வழங்குகின்றது. அதுபோலவே இம்மக்களுக்கும் நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக