வெள்ளி, 13 நவம்பர், 2009

புளொட் பிரான்ஸ் அமைப்பாளர் பிரபாவின் அஞ்சலி நிகழ்வுகள் புளொட் கொழும்பு தலைமைக் காரியாலயத்தில்..

கடந்த 30.10.2009 அன்று பிரான்ஸில் அகால மரணமான தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் சிரேஸ்ட அங்கத்தவரும், கழகத்தின் பிரான்ஸ் கிளையின் அமைப்பாளருமான யாழ். வடமராட்சி பொலிகண்டிப் பிறப்பிடமாகவும் பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட தோழர்.பிரபாவின் (இராஜமனோகரன் பிரபாகரன்) அஞ்சலி நிகழ்வுகள் மற்றும் இறுதி நிகழ்வுகள் இன்று இடம்பெற்றுள்ளன. கொழும்பு பம்பலப்பிட்டியிலுள்ள புளொட் தலைமைக் காரியாலயகத்தில் புளொட் அமைப்பின் தலைவர் த.தர்மலிங்கம் சித்தார்த்தன் தலைமையில் நேற்றுபிற்பகல் 12.30 மணி அளவில் தோழர் பிரபாவிற்கான அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து அஞ்சலிக் கூட்டமும் நடைபெற்றுள்ளது. இந்நிகழ்வுகளில் புளொட் தலைவருடன், புளொட்டின் சிரேஸ்ட உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களும் கலந்து கொண்டிருந்தனர். இதேவேளை அன்னாரின் வித்துடலானது பிரான்ஸில் நேற்றுமுற்பகல்11.00 முதல் 11.30மணிவரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இதனைத் தொடர்ந்து நேற்றுபிற்பகல் 14.10 முதல் 15.10 மணிவரை இறுதிக் கிரியைகள் இடம்பெற்றுள்ளன. (தகவல் & புகைப்படங்கள்.. புளொட் தலைமையகம்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக