புதன், 25 நவம்பர், 2009
ஆளும் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சித் தலைவர்கள் ஜனாதிபதியை ஆதரிக்க தீர்மானம்!
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தமது ஆதரவை வெளியிட்டுள்ளனர். கொழும்பிலுள்ள மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்றுக்காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு இந்த ஆதரவைத் தெரிவித்தனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் வண.எல்லாவல மேதானந்த தேரர், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, மக்கள் ஐக்கிய முன்னணியின் பொதுச்செயலாளர் அமைச்சர் தினேஸ் குணவர்த்தன, கம்யூனிஸ் கட்சியின் செயலாளர் அமைச்சர் குணசேகர ஆகியோர் கலந்துகொண்டு தமது ஆதரவை வெளியிட்டனர். ஆனால், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகம் தொண்டமான் கலந்து கொண்டபோதும் ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. மலையக மக்கள் முன்னணியின் தலைவர் சந்திரசேகரன் சமூகமளிக்கவில்லை. ஆனால் கட்சியின் மூத்த உறுப்பினரும் பிரதியமைச்சருமான இராதாகிருஷ்ணன் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்குவதாக மாநாட்டில் குறிப்பிட்டார். ஜனாதிபதிப் பதவிக்காலம் முடிவடைவதற்கு இரண்டு ஆண்டு காலத்திற்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தலை நடத்துகின்றமையானது அரசின்மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையின் வெளிப்பாடு என்று அமைச்சர் மைத்திரிபால சிறிசேன ஊடகவியலாளர் மாநாட்டில் சுட்டிக்காட்டினார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக