புதன், 25 நவம்பர், 2009

ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்று இதுவரை தீர்மானிக்கவில்லை -புளொட் தலைவர் சித்தார்த்தன்!

ஜனாதிபதித் தேர்தலில் தமது கட்சி யாரை ஆதரிப்பது என்று இதுவரை எந்தவித தீர்மானத்தையும் எடுக்கவில்லை என புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார் சுவிஸ்லாந்து சூரிச் நகரில் இடம்பெற்ற தமிழ் மக்களுடனான சந்திப்பின் போது இதனைத் தெரிவித்துள்ள அவர் எந்தவொரு ஜனாதிபதியும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை தீர்க்கும் வகையில் தீர்வினை முன்வைக்கப் போவதில்லை என்றும் குறி;ப்பிட்டுள்ளார். அவர்மேலும் தெரிவிக்கையில் இன்று தமிழ் மக்களின் பிரச்சனை சர்வதேச பிரச்சனையாக மாற்றமடைந்துள்ளது யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில் எமது பிரச்சனையில் எவ்வித முன்னேற்றமும் இடம்பெற்றதாக தெரியவில்லை தமிழ்தலைமைகளை பொறுத்தவரை சரியான நிலைப்பாட்டை எடுத்து பலமான சக்தியாக மாறினால்தான் அரசுக்கு அழுத்தம்கொடுக்கமுடியும் என்ற நிலைப்பாடு பல்வேறு தரப்பினராலும் முன்வைக்கப்படுகிறது இந்நிலையில்தான் நாம் தமிழ்தேசிய கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம் எமக்கிடையில் சில உடன்பாடுகளும் எட்டப்பட்டுள்ளன கடந்த மேமாதம் 19ம் திகதிக்கு பின்னர் தமிழ்ச்சமூகம் பலவீனப்பட்டுள்ளதை சகலரும் அறிவர் இதனை கருத்திற் கொண்டு எமது சமூகம் பயனடைய தமிழ்பேசும் கட்சிகள் இணைந்து உரிய தீர்வினை முன்வைக்க வேண்டும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக