ஞாயிறு, 1 நவம்பர், 2009
85 நாட்களுள் 66ஆயிரத்து 142பேர் முகாம்களிலிருந்து விடுவிப்பு
கடந்த 85நாட்களுக்குள் வடக்கிலுள்ள நலன்புரி முகாம்களிலிருந்து 66ஆயிரத்து 142பேர் விடுவிக்கப்பட்டுள்ளதாக வவுனியா அரசஅதிபர் பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். இதன்படி வடக்கிலுள்ள நலன்புரி முகாம்களில் தற்போது 1லட்சத்து 67ஆயிரத்து 111பேர் மாத்திரமே தங்கவைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து நலன்புரி முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்தவர்களில் 20ஆயிரத்து 962குடும்பங்கள் தற்போது அவர்களுடைய சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை இடம்பெயர்ந்தோர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மேலுமொரு தொகுதியினர் இன்று அவர்களுடைய சொந்த இடங்களுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக