சனி, 12 செப்டம்பர், 2009

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி புஷ்மீது செருப்பு வீசிய நபர் விடுதலை

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி புஷ்மீது செருப்பு வீசிய நபருக்கு கார், வீடு, பணம் என குவியும் அன்பளிப்பு!!
கடந்த டிசம்பரில் பக்தாத்தில் அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி புஷ் மீது பாதணிகளை வீசி பிரபலமடைந்த ஈராக் நாட்டு பத்திரிகை நிருபர் முன்டாசர் அல் ஜெய்திக்கு கார், வீடு, பணம் என பல்வேறு பரிசுப்பொருட்களை தரத் தயார் என்று ஏராளமானவர்கள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தெரிவித்த வண்ணம் உள்ளனர். புஷ் மீது பாதணி வீசிய குற்றத்திற்காக அவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஈராக் நீதிமன்றம் 3ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியது. ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியதால் அவர் அடுத்த திங்கட்கிழமை விடுதலை ஆகவுள்ளார். அவர் விடுதலையாகப் போகும் செய்தி கேள்விப்படவே அவருக்கு பரிசில்களை வழங்குவதற்காக பலர் காத்திருக்கின்றனர். இதற்காக பலர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுகின்றனர். இந்த தகவலை த கார்டியன் பத்திரிகை தெரிவித்துள்ளது. நிருபர் இதற்கு முன்பு வேலை செய்த நிறுவனத்தின் அதிபர் 4படுக்கை அறை வசதிகொண்ட வீட்டை கட்டிமுடித்து அவருக்கு இதை இலவசமாக வழங்க தயாராக உள்ளாராம். இதுதவிர அவருக்கு கார்கள் மற்றும் வாகனங்கள் என்பனவற்றையும் கொடுக்க பலரும் தயாராக உள்ளனர். மேலும் அவர் வேலைசெய்த பத்திரிகை அலுவலகத்துக்கு நிறையபேர் தொடர்பு கொண்டு பணம் தருகிறேன் அவரது உடல் நடல் பேண மருத்துவ செலவை ஏற்கிறேன் என்றெல்லாம் தெரிவித்துள்ளனர். மொராக்கோவில் வசித்து வந்த ஈராக்கியர் ஒருவர் முன்டாசர் திருமணம் செய்துக் கொண்டு உல்லாசமாக இருக்க தனது மகளையே தருகிறேன் என்று தெரிவித்துள்ளாராம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக