புதன், 23 செப்டம்பர், 2009

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் மின்சாரம் தாக்கி சீனப்பிரஜை உயிரிழப்பு

புத்தளம் நுழைச்சோலையில் அமைக்கப்பட்டுவரும் அனல்மின் நிலையத்தில் மின்சாரம் தாக்கியதில் சீன நாட்டுப் பிரஜையொருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்றுமுற்பகல் 10.30அளவில் இடம்பெற்றதாக புத்தளம் பொலீசார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் உயிரிழந்தவர் குறித்த அனல்மின் உற்பத்தி நிலையத்தில் பணிபுரிந்து வந்தநிலையில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. சடலம் புத்தளம் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டிருப்பதுடன், இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலீசார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக