புதன், 27 மே, 2015

அம்மாவையும் தம்பிமாரையும் விட்டு விடுங்கள்: நாமல் ராஜபக்ஷ

தானும் தனது தந்தை மஹிந்த ராஜபக்ஷவும் மாதிரமே அரசியலில் இருக்கிறோம் என்று தெரிவித்துள்ள நாமல் ராஜபக்ஷ எம்.பி, தனது அம்மாவிடமும் தம்பிமாரிடமும் அரசியல் பழிவாங்கலை மேற்கொள்ள வேண்டாம் என அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.
இது தொடர்பில் தனது முகப்புத்தகக் கணக்கில் குறிப்பொன்றைப் பதிவேற்றம் செய்துள்ள நாமல் எம்.பி, அதில் மேலும் கூறியுள்ளதாவது,
‘நிதி மோசடி குற்ற விசாரணைப் பிரிவின் விசாரணையில் எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி கலந்துகொள்ளுமாறு என்னுடைய தாய் ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது.

எனது தாய், எப்பொழுதுமே அரசியலிலிருந்து விலகி இருந்தவர். என்னுடைய தாயை இப்படி நடத்துவது சரியா?. நல்லாட்சி என்பது இந்த அரசாங்கத்துக்கு வெறும் இடைமுகம் மாத்திரமே.
பழிவாங்கல் நடவடிக்கைகள் நல்லாட்சி ஆகாது. என்னுடைய தாயை இலக்கு வைத்திருப்பதிலிருந்து அது வெளிப்படையாகிறது’ என அவர் அதில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக