
முஸ்லிம் மக்களை சுட்டிக்காட்டி அவர்கள் தம்முடைய மக்கள் என சிலர் கூறுகின்றனர். ஆகவே கொடுக்கல் வாங்கள் ஒன்றை செய்வோமா என கேட்கின்றனர். ஆனால் தலைவர்களின் தேவைக்கு ஏற்ப அந்த முஸ்லிம் மக்கள் பணத்திற்காக விலை போகமாட்டார்கள் என நாங்கள் கூறுகின்றோம்.
தலைவர்கள் வருவதாகவும் செல்வதாகவும் போலியான பிரசாரங்கள் முன்னெடுக்கின்றனர்.
ஆனால் ஒரு தலைவர் கூட வரவில்லை. இன்று தான் இரண்டு பேர் சென்றுள்ளனர்.
எமது பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் பெற்றுக் கொண்டு ஒருவர் இன்று சென்றுள்ளார்.
வெட்கம் இருந்திருந்தால் அந்த பதவியில் இருந்து விலகிவிட்டு சென்றிருக்க வேண்டும்.
கடந்த பொது தேர்தலின் போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ{க்கு சிறிலங்காவின் அரசாங்கம் தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி ஒன்றை வழங்குவதாக உறுதியளித்திருந்தது.
இதற்காகவே கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் பதவி விலகி, அந்த பதவி அமீர் அலிக்கு வழங்கப்பட்டது.
இந்த நிலையில் அவர்கள் இருவரும் இன்று எதிரணியுடன் இணைந்து கொண்டனர்.
இதனை அடுத்து நாடாளுமன்றத்தில் காணப்பட்ட அரசாங்கத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையும் இல்லாது போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக