ஞாயிறு, 11 ஜனவரி, 2015

சுதந்திரக் கட்சியின் தலைவராக தொடர்ந்தும் மஹிந்த..!!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பெரும்பான்மை ஆதரவு முன்னாள் ஜனாதபதி மஹிந்த ராஜபக்சவிற்கே என பாராளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்சஷ யாப்பா தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 42 மத்திய செயற்குழு உறுப்பினர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை ஆதரிப்பதாக அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து நீக்கப்பட்டதாகவும், புதிய தலைவராக மைத்திரிபால சிறிசேன நியமிக்கப்பட்டதாகவும் ஒரு தரப்பினர் அறிவித்துள்ளனர்.


எனினும் கட்சியின் பெரும்பான்மை பலம் மஹிந்தவுக்கே காணப்படுவதாக அனுர பிரியதர்சஷ யாப்பா தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக