திங்கள், 12 ஜனவரி, 2015

தோல்வியடைந்தால் அமைதியாக வெளியேறுவேன் என அமெரிக்காவிடம் தெரிவித்திருந்தேன் மஹிந்த..!!!

தேர்தலில் தோல்வியடைந்தால் நான் அமைதியான முறையில் வெளியேறுவேன் என அமெரிக்க இராஜாங்கச் செயலாளரிடம் உறுதியளித்திருந்தேன். இதற்கு அமையவே நான் நல்லாட்சிக்காக அதிகாரத்தை அமைதியான முறையில் கையளித்து விட்டுச் சென்றேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மத்திய செயற்குழு கூட்டத்தின் பின்னர் வெளியில் வந்த மஹிந்த ராஜபக்ச, அங்கு கூடியிருந்த மக்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்தார்.

நான் நீதியானதும் சுதந்திரமான தேர்தல் ஒன்றை நடாத்த ஒத்துழைப்பு வழங்கினேன்.


மேலும் நான் அமெரிக்காவுக்கு தெரிவித்திருந்தற்கமைய அமைதியான முறையில் ஆட்சியை கொடுத்து விட்டுச் சென்றேன்.

தேர்தல் முடிவுகள் கிடைக்கப் பெற்று இதுவரையான காலப்பகுதியில் எமது ஆதரவாளர்கள் மீது வன்முறைச் சம்பவங்கள் நடந்ததாக அறியவந்துள்ளது.

இவ்வாறான சம்பவங்களுக்கு புதிய ஜனாதிபதி இடம்கொடுக்க கூடாது எனவும் அவருடைய எதிர்கால செயற்பாடுகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன் எனவும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக