ஞாயிறு, 11 ஜனவரி, 2015

முல்லை. முள்ளியவளை பாடசாலையில் 10 ஆட்லறி ஷெல்கள் மீட்பு..!!

முல்லைத்தீவு, முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி வளாகத்திலிருந்து 10 ஆட்லறி ஷெல்களை பாடசாலை மாணவர்கள் கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில் படையினர் மீட்டுச் சென்றதாக தெரியவருகின்றது.
நேற்று சனிக்கிழமை  இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த பாடசாலை சாரணிய மாணவர்கள் பாடசாலையின் பிற்பகுதியில் முகாம் அமைப்பதற்காக நிலத்தை தோண்டிய போது இரும்பு போன்ற பொருட்கள் தட்டுப்பட்டுள்ளது.

இதனையடுத்து பொறுப்பான ஆசிரியர்களுக்கு மாணவர்கள் விடயத்தை தெரியப்படுத்தியதையடுத்து அங்கு வந்த ஆசிரியர்கள் அவை வெடிபொருட்கள் என்பதை அடையாளப்படுத்தியதுடன், உட னடியாக படையினருக்கும் தெரியப்படுத்தியுள்ளனர்.


இந்நிலையில் குறித்த இடத்திற்கு வந்த படையினர் மற்றும் வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினர் குறித்த குண்டுகளை பாதுகாப்பாக அங்கிருந்து அகற்றிச் சென்றிருப்பதாக தெரியவருகின்றது.

மேலும் நேற்றைய தினம் வவுனியா, நெளுக்குளம் கலைமகள் வித்தியாலயத்தின் மைதானத்திலிருந்தும் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டதாக தெரியவருகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக