ஞாயிறு, 11 ஜனவரி, 2015

பொதுநலவாய நாடுகள் அமைப்பின் தலைவராகின்றார் மைத்திரி..!!!

பொதுநலவாய நாடுகள் அமைப்பின் தலைமைப் பதவியை புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

பொதுநலவாய நாடுகள் அமைப்பின் தலைவராக கடமையாற்றி வந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, ஜனாதிபதி தேர்தலில் தோல்வியைத் தழுவியதுடன் அவரது தலைமைப் பதவி ரத்தானது.

அதன் பின்னர் இலங்கையின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட மைத்திரிபால சிறிசேனவிற்கு, பொதுநலவாய நாடுகள் அமைப்பின் தலைமைப் பதவி வழங்கப்பட்டுள்ளது.

2013ம் ஆண்டு நவம்பர் மாதம் 15ம் திகதி முதல் 17ம் திகதி வரையில் கொழும்பில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகள் அமைப்பின் தலைவர்கள் மாநாட்டின் போது, அமைப்பின் தலைமைப் பதவி இலங்கைக்கு வழங்கப்பட்டது.


எதிர்வரும் செப்டம்பர் மாதம் 24ம் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாடு மோல்டாவில் நடைபெறவுள்ளது.

இந்த மாநாடு நடைபெறும் வரையில் பொதுநலவாய நாடுகள் அமைப்பின் தலைவராக மைத்திரிபால சிறிசேன கடமையாற்றுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக