ஞாயிறு, 4 ஜனவரி, 2015

(படங்கள்) வவுனியாவில் ஒளவையார் நினைவு தினம் அனுஷ்டிப்பு…!!

வவுனியா நகர வரியிறுப்பாளர் சங்கமும் ,வவுனியா கலை ,இலக்கிய நண்பர்கள் வட்டமும் இணைந்து ஏற்பாடு செய்த தமிழ் பெண் புலவர் ஔவை பிராட்டியின் நினைவு தினம் 04.01.2015 இன்று காலை 8.30 மணிக்கு வவுனியா வெளிக்குளம் பாடசாலைக்கு அருகில் அமைந்துள்ள ஒளவையார் சிலையடியில் தமிழ் மணி அகளங்கன் தலைமையில் சிலையை பராமரிக்கும் முன்னாள் நகரசபை உறுப்பினர் தேசமான்ய குமாரசாமி அனுசரணையில் இடம் பெற்றது.

இந்த நிகழ்வில் முன்னாள் உபநகரபிதா சந்திரகுலசிங்கம் (மோகன் )முன்னாள் நகரசபை உறுப்பினர் தேசமான்ய குமாரசா,வவுனியா நகர வரியிறுப்பாளர் சங்க தலைவர் சந்திரகுமார் (கண்ணன் )கலைஞர் மாணிக்கம் ஜெகன் ,ஓய்வு பெற்ற அதிபர் சிவஞானம் ,வவுனியா மாவட்ட மக்கள் ஒன்றிய செயலாளர் சஜீஸ் ,ஓய்வு பெற்ற கோட்ட கல்வி அதிகாரி நடராசா,அதிபர் நேசன் ,நகரசபை அலுவலர் பபிந்தன் உட்பட சமுக ஆர்வலர் விக்னா ,நிகேதன் ,உட்பட பலரும் கலந்து கொண்டனர் .


முதலில் மாலை அணிவித்தும் ,பூ போட்டும் ஔவை பாட்டிக்கு கௌரவ படுத்தியபின் தமிழ் மணி அகளங்கன் தலைமை உரை நிகழ்த்தினார்

அவர் தனதுரையில் நாம் எல்லோருக்கும் தனி தனி பாட்டி உண்டு ,ஆனால் ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் ஒரே பாட்டியாக ஒளவையார் திகழ்கிறார் எனவும் ,பெண்கள் எப்போதும் இளமையில் அழகாக இருக்க வேண்டும் என்றே நினைப்பார்கள் ஆனால் ஔவை பாட்டியோ இளமையையே திறந்து முதிய கோலம் பூண்டு கொண்டவர் எனவும் குறிப்பிட்டதுடன் ,அதியமான் அரசனுக்கும் ,தொண்டைமான் அரசனுக்கும் நடக்கவிருந்த போரை ஒரு தூதராக சென்று சமரசம் செய்து போரை நிறுத்தி முதலாவது பெண் தூதர் (அம்பாசிடர் )என்ற பெருமையையும் பெற்றவர் ஒளவையார் என்றார் ,
அவர் மேலும் உரையாற்றுகையில் கல்வியை வீடுகளுக்கு கொண்டு சென்று பிள்ளைகளுக்கு கற்பித்தவர் என்றும் ,கட்டளை இடாமல் அன்பாக
அறம் செய்ய விரும்பு என்று அன்பாகவே சொல்லி கொடுத்தார் என்று ஔவை பாட்டியின் பெருமைகளை நயம்பட உரைத்தார் .

பின்னர் உரை நிகழ்த்திய முன்னாள் நகரசபை உறுப்பினரும் ,சிலையை பராமரிபவருமான தேசமான்ய குமாரசாமி அவர்கள் தாம் 1997 இல் தமிழ் பெரியார் சிலைகளை வைக்க,தாங்கள் பட்ட இன்னல்களையும் .அதை பேண வேண்டிய அவசியத்தையும் உணர்த்தி உரையாற்றினார் .

பின்னர் முன்னாள் உபநகரபிதா சந்திரகுலசிங்கம் (மோகன் )தனதுரையில் இந்த தமிழ் பெரியார் சிலைகளை 1997 இல் தாம் வைத்து பல வருடங்கள் நகரசபை நினைவு கூறாது விட்டு விட்டாலும் கடந்த 3 வருடங்களாக வவுனியா நகர வரியிறுப்பாளர் சங்க தலைவர் சந்திரகுமார் (கண்ணன் ) அவர்கள் சமுக நலன்விரும்பிகள் மூலம் புனரமைத்து இந்த நினைவு நிகழ்வுகளை செய்வது பாராடுதளுக்குரியது என்றும் ,வவுனியா நகரசபை ஏனோ தானோ என்று இல்லாமல் இந்த சிலைகளை என்னும் மெருகூட்டி எதிர்கால சந்ததிக்கு இந்த தமிழ் பெரியார் சிலைகளின் பெருமைகளை அறிய வழி சமைக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார் ,

இறுதியில் சந்திரகுமார் (கண்ணன்) அவர்களின் நன்றி உரையுடன் நிகழ்வு நிறைவடைந்தது.















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக