புதன், 31 டிசம்பர், 2014

(படங்கள் இணைப்பு) வவுனியா திருநாவற்குளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புளொட் அமைப்பால் வெள்ள நிவாரணம் வழங்கப்பட்டது.!!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சியான தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின்(புளொட்)  தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தனின் பணிப்புரைக்கமைய, தமீழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் லண்டன் கிளையைச் சேர்ந்த திரு தர்மலிங்கம் நாகராஜா அவர்களின் நிதிப் பங்களிப்பில் இவ் நிவாரண பொருட்கள் இன்றைய தினம்(31/12/2014)  திருநாவற்குள மக்களுக்கு புளொட் அமைப்பால் வழங்கி வைக்கப்பட்டது.

இவ் சமூகப் பணியில் வவுனியா மாவட்ட இணைப்பாளர் திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்), முல்லை மாவட்ட இணைப்பாளர் திரு க.சிவநேசன்(பவன்), புளொட் முக்கியஸ்தர் திரு முத்தையா கண்ணதாசன் கோவில்குளம் இளைஞர் கழகத்தின் காண்டீபன், சுகந்தன், சஞ்சீ,நிகேதன் ஆகியோரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வட கிழக்கு உறவுகளுக்கு அவசர உதவி கோருகிறது வவுனியா கோவில்குளம் இளைஞர் கழகம்.

இலங்கையில் ஏற்பட்ட கால நிலை மாற்றத்தின் எதிரொலியால் பாதிக்கப்பட்ட வட கிழக்கு உறவுகளுக்கு புலம்பெயர் கருணை உள்ளங்கள் உள்ளூரில் இருக்கும் கொடையாளிகளின் உதவிகளை வவுனியா கோயில்குளம் இளைஞர் கழகத்தின் இடர் முகாமத்துவப்பிரிவு நாடியுள்ளது.

திடீரென ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தால் பாதிப்புக்குள்ளான மக்கள் இடம் பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்கள், கோயில்கள், சனசமூக நிலையங்கள், பாடசாலைகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

இம்மக்களுக்கான அடிப்படை உதவிகளான சிறுவர்களுக்கான பால்மா, பெரியார்களுக்கான பால்மா, வெட்சீற், பாய், உடைகள், சோப், துவாய், சிறுவர்களுக்கான சுகாதாரப் பொருட்கள், நுளம்பு வலை, சிக்னல், விறஸ், சமையல் பாத்திரங்கள், உணவு உண்ணும் பாத்திரம் எனும் அவசியப் பொருட்கள் தேவையாக உள்ளதுடன் அவர்கள் மீண்டும் தமது இருப்பிடம் செல்லும் போது அவர்களுக்கான உலர் உணவுப் பொருட்கள் போன்றவை தேவையாக உள்ளது.

எனவே மனித நேய உணர்வு மிக்க எமது உறவுகள் உங்களால் முடிந்த நிதி அல்லது பொருள் உதவிகளை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றார்கள்.

பொருள் உதவிகளை நேரடியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கலாம் அல்லது கழகத்தின் அலுவலகமான வவுனியா கோவில்குளம் இளைஞர் கழகம், இல.58, 5 ம் ஒழுங்கை, கோவில் புதுக்குளம், வவுனியா என்ற முகவரிக்கு சென்று கையளிக்கலாம்.

தொடர்புகளுக்கு - ஊடகப்பிரிவு, வவுனியா கோவில்குளம் இளைஞர் கழகம்.
1. 0766644059
2. 0757729544
3. 0770733719
4. 0775058672






















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக