
ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க ஏனைய வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களும் தற்போது தயாராகி இருப்பதாக இச் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
வெளிநாடுகளில் வாழ்ந்த இலங்கையர்கள் யுத்த காலத்தில் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தப்பட்டனர்.
தற்போது நிலைமை சீராகி உள்ளது. இதற்கு மூலகாரணம் மஹிந்த ராஜபக்சவின் நிர் வாகமே என்பது சம்மேளனத்தின் கருத்தாகும்.
குவைத்தில் வசிக்கும் வர்த்தகர்கள். மற்றும் நிறுவனங்களின் பிரதிநிதிகள் இந்த அமைப்பில் உள்ளனர். இலங்கை மன்றக் கல்லூரியில் குவைத்தின் இலங்கையர் சம்மேளனம் இது தொடர்பான ஊடகச் சந்திப்பை நடத்தியது.
சுமித் திசாநாயக்க. சுமித் கஹந்தவல. நசீம் தீன், சிவா டெனியல் அடிகளார், சந்திரா ரத்னவீர உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.
30 ஆண்டுகள் இலங்கையில் யுத்தம் நிகழ்ந்தது. அந்த நாட்களில் நாட்டை நிர்வகித்த நிர்வாகிகள் தற்போது மைத்திரியை சுற்றி உள்ளனர்.
இந்த செயற்பாட்டை வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுள் அநேகர் கண்டிப்பதாக சுமித் கஹந்தவல தெரிவித்தார்.
சுமித் திசாநாயக்க கருத்து தெரிவிக்கையில், 05 லட்சம் இலங்கையர்கள் வரை வெளிநாடுகளில் வசிக்கின்றனர்.
படைவீரர்களைப் போன்று நாட்டு மக்களையும் நினைத்து செயற்பட்ட ஜனாதிபதிக்கு அவர்கள் சகலரின் ஆதரவும் கிடைக்கும்.
டயஸ்போராவுக்கு இடம் இல்லை என்றும் தெரிவித்தார்.
அமெரிக்கா, பிரிட்டன் தூதுவர்கள் மைத்திரிபாலவையும், எதிர்க்கட்சிகளையும் நிர்வகிக்கின்றன. மைத்திரிபால நிர்வாகத்துக்கு வந்தால் முழு இலங்கையும் அந்நிய சக்திகளுக்கு அடிமைப்படும் என்றும் அவர் தொடர்ந்து தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக